மூடப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள்

tamilni 483

நாடாளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம், நீர்க்கட்டணம் மற்றும் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை, முட்டை விலை அதிகரிப்பு என்பதன் காரணமாக வெதுப்பக உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதில் இருந்து அதிகளவான நுகர்வோர்கள் விலகியுள்ளனர்.

இதன் காரணமாக வெதுப்பக உற்பத்தி தொழிற்துறை பின்னடைவைச் சந்தித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version