பொலிஸார் வேடத்தில் வீட்டினுள் நுழைந்து கொள்ளை

tamilni 259

பொலிஸார் வேடத்தில் வீட்டினுள் நுழைந்து கொள்ளை

பதுளை – ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் நேற்று (16.07.2023) இரவு வாள் மற்றும் தடிகளை ஏந்தியவாறு வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொள்ளைச்சம்பவத்தில் சுமார் 40 இலட்சம் பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று இரவு 10 மணியளவில் குறித்த வீட்டிற்கு சென்ற கொள்ளை கும்பல், பொலிஸார் என அறிமுகம் செய்து கதவை திறக்க செய்துள்ளனர்.

அதன் பின் தடிகளோடும் கூறிய ஆயுதங்களோடும் உள்ளே நுழைந்து, வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது 2 மகன்மார் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் வீட்டின் அறைகளில் இருந்த தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சந்தேகநபர்கள் பொலிஸ் சீருடைக்கு நிகரான சீருடை அணிந்து, வெள்ளை பாதுகாப்பு தலைக்கவசம் மற்றும் கறுப்பு முகமூடிகளை அணிந்து மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version