24 669b11ccc0213
இலங்கைசெய்திகள்

இளைஞர் எடுத்த விபரீத முடிவு

Share

இளைஞர் எடுத்த விபரீத முடிவு

பதுளை – கொழும்பு தொடருந்து பாதையில் உறங்கி இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தம்பிட்டி, ரம்புக்கன, எலுகல்ல கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய திருமணமாகாத இளைஞனே கடந்த (17) திகதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தந்தை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தாயார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் தனது பாட்டியின் மரணத்திற்குப் பிறகு சலூன் ஒன்றை ஆரம்பித்து, தனது அத்தையின் பராமரிப்பில் குறித்த இளைஞன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதன்போது பதுளை பிரதேசத்தில் உள்ள யுவதி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த யுவதி உறவை நிறுத்தியதால் மனமுடைந்து பதுளை – கொழும்பு தொடருந்து பாதையில் படுத்து உறங்கி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சடலம் கேகாலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின்தொடருந்தின் சாரதி திடீர் மரண விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை நேற்று (19) கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.எம்.ஆர்.பி. குணவர்தனவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர், சடலத்தை பொலிஸார் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன், உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று (20) பத்தம்பிட்டியவில் இடம்பெறவுள்ளன.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...