களு கங்கையை அண்டி வாழும் மக்களுக்கு எச்சரிக்கை! சடுதியாக உயர்ந்துள்ள நீர்மட்டம்

24 66c06f86a76b0 1

களு கங்கையை அண்டி வாழும் மக்களுக்கு எச்சரிக்கை! சடுதியாக உயர்ந்துள்ள நீர்மட்டம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களு கங்கையின் நீர் மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தாழ்வான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குடா கங்கை உள்ளிட்ட ஏனைய சில கங்கைகளின் நீர்மட்டமும் உயர்வடைந்ததன் காரணமாக அண்டியுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடா கங்கையின் தாழ்வான பகுதிகளின் ஊடாக பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், புலத்சிங்கள, பாலிந்தநுவர மற்றும் மதுராவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version