உலகை அச்சுறுத்தும் பாபா வாங்காவின் 2026 கணிப்புகள்: 3-ம் உலகப்போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி!

25 691805cfda215

எதிர்காலத்தைக் கணிப்பதில் உலகப் புகழ்பெற்றவரான பாபா வங்கா (Baba Vanga), 2026 ஆம் ஆண்டு மனிதகுலத்திற்குப் பெரும் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என எச்சரித்துள்ளார். அவர் முன்கூட்டியே சொல்லியிருந்த பல விடயங்கள் ஏற்கனவே நடந்திருப்பதால், இந்தக் கணிப்பு தற்போது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 இல் உலகப் பொருளாதாரம் பாரிய சரிவைச் சந்திக்கும். நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போட்டிகளால் சர்வதேச சந்தை நிலைகுலையும். காகிதப் பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடையும்.

உலக நாடுகளுக்கு இடையே நிலவும் முறுகல் நிலைகள் தீவிரமடைந்து ஒரு பெரும் போர் வெடிக்கக்கூடும். இது ‘மூன்றாம் உலகப் போராக’ மாற வாய்ப்புள்ளதாகவும், இதனால் மேற்கத்திய நாடுகள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் காரணமாகப் பாரிய நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்கு மற்றும் வெப்ப அலைகளின் (Heat Waves) தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி கட்டுக்கடங்காமல் செல்லும். இது மனிதர்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பாரிய சவால்களை உருவாக்கும். பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் (Aliens) வரக்கூடும் என்றும் அவர் கணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல்கேரியாவைச் சேர்ந்தவரான பாபா வங்கா, ஏற்கனவே இந்திரா காந்தியின் மரணம், அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதல் (9/11) மற்றும் சுனாமி போன்றவற்றைச் சரியாகக் கணித்தவர் என நம்பப்படுகிறார். இதன் காரணமாகவே, 2026 ஆம் ஆண்டுக்கான அவரது எச்சரிக்கைகள் தற்போது உலக அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

 

 

Exit mobile version