13
இலங்கைசெய்திகள்

2025 குறித்து பாபா வங்கா – நாஸ்ட்ரடாமஸின் திடுக்கிடும் கணிப்புக்கள்

Share

2025 குறித்து பாபா வங்கா – நாஸ்ட்ரடாமஸின் திடுக்கிடும் கணிப்புக்கள்

உலகமே புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடி வரும் நிலையில், வரலாற்றில் மிகவும் அறியப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகளான நோஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா ஆகியோரின் 2025 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் வெளியாகியுள்ளன.

1996 இல் இறந்த பல்கேரிய நாட்டவரான பாபா வங்கா மற்றும் 1566 இல் இறந்த பிரெஞ்சு நபரான நோஸ்ட்ராடாமஸ் ஆகிய இருவரும் எதிர்வரும் வருடங்களில் நடக்கப்போகும், முக்கிய விடயங்கள், அழிவுகள், போர்கள், இயற்கை சீற்றங்கள், அரசியல் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை துல்லியமாக கணித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எஃப் கென்னடி, அடோல்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் கோவிட் 19 தொற்றுநோய் மற்றும் இதுவரையான உலக போர்கள், இளவரசி டயானாவின் சோகமான விபத்து மற்றும் மரணம், அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் தேர்தல் வெற்றி ஆகியவை அனைத்தும் இவர்களால் துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் விடயங்கள் தொடர்பான பாபா வங்காவின் கணிப்புக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐரோப்பாவில் மக்கள் தொகையை பாதிக்கும் அளவு மிகப் பெரிய போர் உலக அளவில் மிகப் பெரிய சக்தியாக ரஷ்யா எழுச்சி பெறுதல், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரத்தில் முக்கிய நில அதிர்வு மற்றும் தொடர் இயற்கை பேரிடர்கள் ஏற்படும், இறந்த எரிமலைகள் மீண்டும் உயிர்பெறுதல் உள்ளிட்ட பல கணிப்புக்களை பாபா வங்கா கணித்துள்ளார்.

இதேவேளை, பிரெஞ்சு நபரான நோஸ்ட்ராடாமஸ, ஐரோப்பிய எல்லையில் தீவிரமான போர்கள், பிரிட்டனுக்குள் உள்நாட்டு போர் மற்றும் நோய் தாக்கம், பழைய கொள்ளை நோய் திரும்புதல், பாரம்பரிய மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகை கட்டுப்படுத்தும் சக்தி மாறுதல் போன்ற கணிப்புக்களை கணித்துள்ளார், பாபா வங்கா 20 ஆம் நூற்றாண்டில் பல்கேரியாவில் வாழ்ந்தவர்.

நாஸ்ட்ராடமஸ் 16ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் பகுதியில் வாழ்ந்தவர், பல ஆண்டுகள் மற்றும் கலாசார வித்தியாசத்துடன் வாழ்ந்த தீர்க்க தரிசிகளின் கணிப்புக்களில் சில ஒரே மாதிரியானவை.

2025 ஆம் ஆண்டு உலகின் ஆதிக்க சக்தியாக இருக்கும் நாடு மாறுதல் மற்றும் ஐரோப்பாவில் பெரும் போர் ஆகிய விடயங்களை இருவரும் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...