tamilni 246 scaled
இலங்கைசெய்திகள்

சிறையிலிருக்கும் ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட விருது

Share

சிறையிலிருக்கும் ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட விருது

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரான ஹேமந்த லியனபத்திரன, சிங்கள நாளிதழ் ஒன்றில் பணிபுரியும் போது, ஆற்றிய பங்களிப்புகளுக்காக விசேட சந்தர்ப்பங்களின் கீழ் அறிக்கையிடுவதற்கான பேராசிரியர் கைலாசபதி விருதின் கீழ் சிறப்பு விருதைப் பெற்றுள்ளார்.

எனினும் கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஹேமந்த தற்போது குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தகவல் ஒன்றை பகிர்ந்ததன் மூலம் குற்றவாளியான ரமேஸ் என்பவருக்கு உதவியதாக தெரிவித்து ஹேமந்த கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற 24ஆவது பத்திரிகையாளர் விருது வழங்கும் நிகழ்வின் போது, ஹேமந்தவின் சார்பில் விருதைப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கை பத்திரிகை நிறுவனமோ, விருது வழங்கும் விழாவின் ஏற்பாட்டாளர்களான ஆசிரியர் சங்கமோ அவர் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்திருக்கவில்லை.

ஹேமந்தாவின் மனைவிக்குக் கூட அவர் இப்படி ஒரு விருது கிடைத்திருப்பது தெரியாது என்று கூறப்படுகிறது.

இதேவேளை, பாதாள உலக பிரமுகரான ரமேஸூடன் ஹேமந்த தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் விசாரணைகள் இரண்டரை மாதங்கள் கடந்த பின்னரும் முழுமையடையவில்லை என பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

முன்னதாக, ஹேமந்தவின் மனைவியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 66
செய்திகள்அரசியல்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் சொத்து விபரங்கள் சமர்ப்பிப்பு: 10 வருடங்களின் பின் நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள், செலவினங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விபரங்களை...

world 65
செய்திகள்உலகம்

பூமிக்குத் திரும்பியது ஆர்ட்டெமிஸ் II: விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லைப் பதித்த நாசா!

நிலவை நோக்கிய மனிதனின் வரலாற்றுப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, நாசாவின் ஆர்ட்டெமிஸ் II (Artemis II)...

world 64
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியல்: முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்; தோல்வியிலும் 3வது இடத்தில் ஆர்சிபி!

ஐபிஎல் 2026 தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 6...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...