5 38
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ள, அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம்

Share

இலங்கையில் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ள, அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம்

அவுஸ்திரேலியாவின்(Australia) யுனைடெட் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனத்தின் கீழ் 2024, ஆகஸ்ட் 28 முதல் இலங்கையில் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தநிலையில், செயல்பாடுகளுக்கான எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே வந்துவிட்டதாகவும், இறக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம், 20 நிரப்பு நிலையங்கள் வழியாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளது.

முன்னதாக, யுனைடெட் பெட்ரோலியம் லங்கா பிரைவேட். இலங்கை சந்தையில் பெட்ரோலியப் பொருட்களை வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இலங்கை முதலீட்டுச் சபையுடன், 2024 ஜூன் 4 அன்று ஒப்பந்தம் ஒன்றை செய்துக்கொண்டது.

இதன்படி, இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 150 நிரப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு எரிபொருள் விநியோகத்துக்காக, யுனைடெட் பெட்ரோலியத்தை அனுமதித்துள்ளது.

அத்துடன் மேலும் 50 புதிய நிலையங்களை, அமைக்கவும் குறித்த நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...