5 38
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ள, அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம்

Share

இலங்கையில் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ள, அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம்

அவுஸ்திரேலியாவின்(Australia) யுனைடெட் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனத்தின் கீழ் 2024, ஆகஸ்ட் 28 முதல் இலங்கையில் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தநிலையில், செயல்பாடுகளுக்கான எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே வந்துவிட்டதாகவும், இறக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம், 20 நிரப்பு நிலையங்கள் வழியாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளது.

முன்னதாக, யுனைடெட் பெட்ரோலியம் லங்கா பிரைவேட். இலங்கை சந்தையில் பெட்ரோலியப் பொருட்களை வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இலங்கை முதலீட்டுச் சபையுடன், 2024 ஜூன் 4 அன்று ஒப்பந்தம் ஒன்றை செய்துக்கொண்டது.

இதன்படி, இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 150 நிரப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு எரிபொருள் விநியோகத்துக்காக, யுனைடெட் பெட்ரோலியத்தை அனுமதித்துள்ளது.

அத்துடன் மேலும் 50 புதிய நிலையங்களை, அமைக்கவும் குறித்த நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.

 

Share
தொடர்புடையது
kajendrakumar
அரசியல்இலங்கைசெய்திகள்

25,000 ரூபாய் கொடுப்பனவு 50% பேருக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபாய் கொடுப்பனவானது...

images 4 4
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவியை கூட்டு வன்கொடுமை செய்த பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கந்தளாயில் கைது!

டிக்டொக் சமூக ஊடகம் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவி ஒருவரை, கந்தளாய் ஈச்சலம்பற்று கடற்கரைப் பகுதியில்...

images 3 4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை நீக்கம்; பல மாவட்டங்களில் நிலை மஞ்சள் எச்சரிக்கைகள் நீடிப்பு!

நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையால் வழங்கப்பட்டிருந்த நிலை 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன....

articles2FLw0YGr9hA7glocJDAIfQ
இலங்கைசெய்திகள்

வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு!

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் வீதிகள் மூடப்பட்டமையால் பணிக்குச் சமூகமளிக்க முடியாத அரசு அதிகாரிகளுக்கு...