மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்

tamilni 100

மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்

கம்பஹாவில் மின்சார இணைப்பை துண்டிக்கச் சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையம் ஒன்றின் மின்சார இணைப்பை துண்டிக்க சென்ற போதே, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாக்குதலில் காயமடைந்த குறித்த இரண்டு ஊழியர்களும் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version