யாழில் மகனை பார்வையிடச் சென்ற தாய் மீது தாக்குதல்

24 662f1648d6bff

யாழில் மகனை பார்வையிடச் சென்ற தாய் மீது தாக்குதல்

யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது

சிறைச்சாலையில் உள்ள மகனைப் பார்வையிடச் சென்ற வயோதிப தாய் ஒருவர் அறியாமை காரணமாக மகனுக்கு கொடுக்கவென பீடி ஒரு கட்டு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாயையும் மகனையும் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தாக்கப்பட்டுள்ள தாயும் மகனும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே சம்பவம் தொடர்பில் தாக்கப்பட்ட வயோதிப பெண்ணின் உறவினர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Exit mobile version