25 684578d12b30a Recovered 7
இலங்கைசெய்திகள்

இதுவரை அட்லீ இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் செய்துள்ள மொத்த வசூல் விவரம்… இதோ

Share

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக கொண்டாடப்படும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தனது பயணத்தை தொடங்கியவர் அட்லீ.

நண்பன், எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக இருந்துள்ளார். அதன்பின் தனது முதல் முயற்சியாலேயே முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற காதல் திரைப்படம் இயக்கினார்.

இதுவரை அட்லீ இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் செய்துள்ள மொத்த வசூல் விவரம்… இதோ | Atlee 5 Movies Bo Details

அப்போது ஆரம்பித்த பயணம் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை வைத்து படங்கள் இயக்கி இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன்-தீபிகா படுகோனேவை வைத்து பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒரு படம் இயக்குகிறார்.

படம் குறித்து வரும் ஒவ்வொரு தகவல்களும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் ரூ. 50 கோடி வசூல் வேட்டை செய்திருந்தது.

தளபதி விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து அவர் இயக்கிய படம் தெறி. கடந்த 2016ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 150 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.

தெறி பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்தவர் மெர்சல் படத்தை இயக்கினார். விஜய் 3 வேடங்களில் நடிக்க கடந்த 2017ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 240 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.

தெறி, மெர்சல் படம் கொடுத்த வெற்றி 3வது முறையாக பிகில் படம் மூலம் விஜய்யுடன் இணைந்தார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 305 கோடி வரை வசூலை குவித்து சாதனை படைத்தது.

4 படங்கள் செம ஹிட்டடிக்க பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானுக்கு அட்லீ மீது பார்வை பட இருவரும் இணைந்து ஜவான் என்ற படத்தை கொடுத்தார்கள். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படம் உலக அளவில் ரூ. 1117.39 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரும் சாதனை படைத்தது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...