அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் ஆசி பெற்ற கிழக்கு ஆளுநர்
கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman), சியாம் நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரரிடம் ஆசி பெற்றார்.
ஜனாதிபதித் தேர்தல் (Presidential Election) திகதி நேற்று (26) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (27) கிழக்கு ஆளுநர் ஆசி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நிலவும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றியும் சகல சமூகங்களுக்கிடையிலும் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேரருக்கு விளக்கமளித்தார்.
அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து மகாநாயக்க தேரருக்கு எடுத்துரைத்தார்.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் அஸ்கிரிய பீடத்திற்கும் இடையிலான நீண்டகால உறவை மகாநாயக்க தேரர் இதன் போது நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.