இலங்கைசெய்திகள்

இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றம்

24 6618a135e86f0
Share

இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றம்

இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் மிதமான வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னணி பொருளாதார வெளியீடு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் இரண்டு வருட தொடர்ச்சியான வீழ்ச்சியின் பின்னர் இந்த நிலைமையை காட்டுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 1.9 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளதாகவும் 2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் 2.5 வீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடினமான சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தும் வகையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகளை காட்டிய நிலையில், நெருக்கடி நிலைமை மற்றும் பணவீக்கம் இப்போது ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் வௌிநாட்டு பணவனுப்பல்கள் பாராட்டத்தக்க நிலையில் உள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...