2025ஆம் ஆண்டில் ஆசியாவின் வளர்ச்சி பெறும் பட்டியல்! இலங்கை உள்ளடக்கப்படவில்லை

8 17

2025ஆம் ஆண்டில் ஆசியக் கண்டத்தில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியை அடையக்கூடிய நாடுகளின் எதிர்வுகூறல் பட்டியலை சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ளது.

குறித்த எதிர்வுகூறல் பட்டியலின் பிரகாரம் இந்தியா 6.2 புள்ளி பொருளாதார வளர்ச்சி வேகத்துடன் முதலாம் இடத்திலும், 5.5 புள்ளி வளர்ச்சி வேகத்துடன் பிலிப்பைன்ஸ் இரண்டாம் இடத்திலும், 5.2 புள்ளி வளர்ச்சி வேகத்துடன் வியட்னாம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

முன்னைய காலங்களில் ஆசியாவின் பொருளாதார ஜாம்பவான்களாக கருதப்பட்ட ஜப்பான், கொரியா, ஹொங்கொங், சிங்கப்பூர் என்பன சற்று பின்னடைந்த பொருளாதார வளர்ச்சியையே அடையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஆசியக் கண்டத்தின் பத்து நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள குறித்த எதிர்வுகூறல் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version