யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(31) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.