25 67b97d3bd5814
இலங்கைசெய்திகள்

படுகொலைகளின் எதிரொலி: இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பேரிடி!

Share

படுகொலைகளின் எதிரொலி: இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பேரிடி!

ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அத்தகைய நபர்களை கைது செய்வதற்காக அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யும் திறன் இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர்களின் கேள்வியொன்றுக்கு பதில் அளித்த பாதுகாப்பு செயலாளர், கடமையில் இருக்கும் இராணுவ வீரர்கள் சிலரும் பொருளாதார நெருக்கடி மற்றும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் காலத்தில் அந்த வீரர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...