கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது ஏற்பட்ட இழுபறியின் போது அதிரடிப்படையினரே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment