Robbery.jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மின்தடையை பாவித்து கொள்ளையடிக்கும் மாபியா!!

Share

நாட்டில் இரவுவேளைகளிலும் மின்வெட்டு அமுலாவதால், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்று பொலிஸ் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களில் அதிகமானவை, மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது இடம்பெற்றவை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்படும்போது பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பதும் திருட்டு அதிகரிக்க காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் சில தினங்களுக்கு முன்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விகாராதிபதியின் அலுவலக அறையில் உள்ள தங்க தாயத்து மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

விஹாரையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் அச்சந்தர்ப்பத்தில் மின்வெட்டு அமுலில் இருந்ததால் கேமராக்கள் செயலிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில இடங்களிலும் மின்வெட்டு வேளையில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...