அர்ச்சுனா போலி தகவல்களை வெளியிடுவதாக ஆங்கில ஊடகம் காட்டம்

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா போலி தகவல்களை நாடாளுமன்றில் வெளியிடுவதாக பிரபல ஆங்கில ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்த அமர்வில், அர்சுனா தவறான தகவலை வெளிப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர் தனது உரையில், யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளைக் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக, ஒரு தாயும், மூன்று மாதக் குழந்தையும் சேர்ந்து புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குழந்தையை தாய் தனது கைகளில் பற்றிக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

எனினும், இத்தகவல் முற்றிலும் பொய்யானது என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு நடவடிக்ககைகளின் இரண்டாவது கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதில், ஒரு தாய் தனது குழந்தையை கட்டிக் கொண்டு இருந்தது போன்ற எலும்புக்கூடுகள் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு பதிலாக, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட உருவப்படத்தின் அடிப்படையிலேயே அர்சுனா ராமநாதன் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனாவின் இந்தக் கருத்துக்கு தமிழ் சமூகம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Exit mobile version