18 3
இலங்கைசெய்திகள்

நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

Share

நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நிலையியற் கட்டளைக்கு முரணாக கருத்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(04.12.2024) அமர்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நிலையியற் கட்டளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்று (04) கருத்து பரிமாற்றம் இடம்பெற்றது.

தாம் இனவாத ரீதியாகக் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நிலையியற் கட்டளையின் ஊடாக கருத்துரைத்திருந்தார்.

இதனையடுத்து எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்றிலேயே இனவாதம் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கங்கள் இனரீதியாகச் செயற்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் இனரீதியாகச் செயற்படவில்லை. கடந்த காலங்களிலிருந்த அரசியல் தலைவர்கள் மீதான எதிர்ப்பின் காரணமாகவே, தம்மைப் போன்ற சுயேட்சை வேட்பாளர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்துக்குள் இனவாதம் ஏற்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து கருத்துரைத்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையியற் கட்டளைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதன் விளைவாகவே, புதிய உறுப்பினர்களும் அதனை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஆமோதித்து கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நிலையியற் கட்டளை உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளைகள் 33 மற்றும் 32 ஆகியன வாய்மூல கேள்வியுடன் தொடர்புடையவையாகும்.

எனினும் அதனைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துரைப்பது முழுமையாகத் தவறான விடயமாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நல்லதண்ணி – நுவரெலியா பிரதான வீதியில் மகிழுந்து விபத்து: மூவர் காயம்!

நல்லதண்ணி பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 15...

14 12
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,444 ஆக உயர்வு!

கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து...

13 11
செய்திகள்உலகம்

ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம்: நான்கு வீரர்கள் உயிரிழப்பு – அமெரிக்க இராணுவம் உறுதி!

மேற்கு ஈராக் வான்பரப்பில், அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘போயிங் KC-135 Stratotanker’ ரக எரிபொருள் நிரப்பும்...

12 12
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை அவசியம் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் மோதல்கள் மற்றும் அவற்றால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களைக்...