tamilni 277 scaled
இலங்கைசெய்திகள்

அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து அறிவிப்பு

Share

அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து அறிவிப்பு

நீண்ட காலமாக இழுபறி நிலையில் காணப்பட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் இன்று (14.3.2024) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிய வருகையில், 2016 ஆம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட்ட அவர்கள், 2019ஆம் ஆண்டு நியமனத்திற்கான சகல தகுதியினையும் பூர்த்தி செய்திருந்தனர்.

எனினும், கொவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி அவர்களுக்கான நியமனம் வழங்கப்படாதிருந்தது.

இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நியமனம் தொடர்பில் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது, 138 ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் பதிலளித்ததாக இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...