லண்டன் பேருந்துகளில் காட்சியளிக்கும் அநுரகுமார

24 665c0b466a6da

லண்டன் பேருந்துகளில் காட்சியளிக்கும் அநுரகுமார

தேசிய மக்கள் படையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க( anura kumara dissanayaka) பிரித்தானியாவிற்கு (uk) விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பிரித்தானியாவிலுள்ள இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றும் பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அவரின் வருகையையொட்டி, இலங்கையர்கள் பேருந்துக்கு வர்ணம் பூசி அவரது சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.

அநுரகுமார திஸநாயக்க அண்மையில் கனடா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version