24 6632e38934210
இலங்கைசெய்திகள்

ஒரு டிக்கெட்டால் மேடையில் வைத்து பறிபோன அனுரவின் மரியாதை

Share

ஒரு டிக்கெட்டால் மேடையில் வைத்து பறிபோன அனுரவின் மரியாதை

“மே தினத்தை நடத்த பிச்சை எடுப்பவர்கள் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? கட்சி நிதியில் உள்ள 900 கோடி ரூபாய் இப்போது எங்கே” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், அனுரகுமாரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி கொழும்பு, செத்தம் வீதியில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேடையில் வைத்து தேசிய மக்கள் சக்தி விற்பனை செய்ததாக கூறப்படும் டிக்கெட்டையும் அவர் காட்டியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் “தேசிய மக்கள் சக்தியானது மே தினச் செலவை அப்பாவித் தொழிலாளர் மீது சுமத்தியுள்ளது.

இந்த டிக்கெட் எனக்கு அலவ்வ சென்ட்ரல் ஆசிரியர் ஒருவரே கொடுத்தார். தற்பெருமை பேசும் அனுர திஸாநாயக்கவின் சக்தி இது.

எனது கையில் இருக்கும் இந்த டிக்கெட், மே தினத்தை கொண்டாடுவதற்காக ஒவ்வொரு கிராமத்தின் தொழிலாளர்களிடம் விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டுள்ளது.

மே தினத்தை நடத்த இப்படி பிச்சை எடுப்பவர்கள் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? கட்சி நிதியில் உள்ள 900 கோடி ரூபாய் இப்போது எங்கே”? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...