34 2
இலங்கைசெய்திகள்

வாக்கு வேட்டைக்காக வடக்கை நாங்கள் அரவணைக்கவில்லை- அநுர அரசு

Share

தேசிய மக்கள் சக்தி உண்மையாகவே வடக்குக்குச் சேவையாற்றுகின்றது,மாறாக வாக்குகளை இலக்குவைத்து எமது கட்சி செயற்படவில்லை இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல்போயிருந்த நிலையில் மீண்டும் கிடைப்பவருக்கே வீடுகளில் கூடுதலாக கவனிப்பு இருக்கும். ஏனெனில் அவர்கள் பட்ட கஷ்டம், வலி பெரும் வேதனைமிக்கதாக இருந்திருக்கும். வடக்கு என்பதும் இலங்கைக்குக் கிடைக்காமல் இருந்த பிள்ளைதான்.

தற்போது அந்தப் பிள்ளை நாட்டுக்குக் கிடைத்துள்ளது. போரால் வடக்கு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். எனவே, தேசிய நல்லிணக்கத்துக்காக மட்டும் அல்ல அபிவிருத்திக்காகவும் எம்மால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வோம்.

இதனை நாம் வாக்குகளுக்காக செய்யவில்லை. நாம் சேவை செய்தால் வாக்கு என்பது தாமாகவே கிடைக்கும். எனவே, உண்மையாகவே சேவையாற்றுகின்றோம். வடக்கு மாகாணத்தில் மன்னாரில் எமக்குப் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.வவுனியாவிலும் வெற்றி கிடைத்துள்ளது.

வடக்கில் 150 உள்ளூராட்சி உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் அவ்வாறு இருக்கவில்லை. கிழக்கிலும் 216 உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...