ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடன் பெறுவது குற்றமல்ல என எதிர்க்கட்சியில் இருக்கும் போதே கூறியிருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சியில் இருந்த போதே கடன் வாங்குவது குற்றமல்ல என அறிவித்திருந்தார்.
வாங்கிய கடன்களால் என்ன செய்யப்படுகிறது என்பதையே அவர் குற்றமாக கருதினார். உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் வளர்ச்சிக்காக கடன் வாங்குகிறது.
இதேவேளை, பணக் கடன் வழங்குபவர் கூட வளர்ச்சிக்காக கடன் வாங்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.