6 27
இலங்கைசெய்திகள்

அநுரவின் உறுதிமொழியால் லக்மாலிக்கு ஏற்பட்ட சிக்கல்

Share

தேசிய மக்கள் சக்தியையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாகன ஏலம் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட  உரையாடலின் போதே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த, தற்போதைய ஜனாதிபதி முன்வைத்த சில கருத்துக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் மதிப்புள்ள வாகனங்களை பயன்படுத்துவதாகவும், தான் ஜனாதிபதியானவுடன் அவற்றை ஏலம் விடுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  கூறியதாக இதன்போது பிரேம்நாத் சி தொலவத்த சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இதை சவால் செய்த லக்மாலி ஹேமச்சந்திரா, ஜனாதிபதி அவ்வாறு கூறவில்லை என்றும், அவ்வாறு கூறியிருந்தால், அதை பிரேம்நாத் சி தொலவத்த நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொலவத்த, ஜனாதிபதியின் அறிக்கையை தனது கையடக்க தொலைபேசியில் பிரதியெடுத்து நிகழ்ச்சிக்கு முன்னால் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் லக்மாலி ஹேமச்சந்திரா, தனது சொந்த தகவலுக்காக இது குறித்து விசாரித்ததாகவும், ஜனாதிபதி அப்படிச் சொன்னால் அது சரி என்றும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...