24 66e525941aa93
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசைக் கவிழ்க்க வன்முறைப் போராட்டங்களை நடத்திய அநுர தரப்பு

Share

இலங்கை அரசைக் கவிழ்க்க வன்முறைப் போராட்டங்களை நடத்திய அநுர தரப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணி வேட்பாளராக களமிறங்கிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான கட்சி, இலங்கை அரசைக் கவிழ்க்க இரண்டு வன்முறைப் போராட்டங்களை நடத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மற்றும் தேசிய அதிகார எழுச்சி தொடர்பிலான விசேட அறிக்கையொன்றை முன்வைக்கும் போதே குறித்த செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய புவிசார் அரசியல் போட்டியாளரான சீனாவுடன் தேசிய மக்கள் சக்தி நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்காவிட்டாலும், தினசரி போராட்டங்கள் நடத்தி, காலி முகத்திடலில் கூடாரம் போட்டு, பொது வேலைநிறுத்தங்களை நடத்தி பெரும் பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1971 மற்றும் 1988 க்கு இடையில் ஜனதா விமுக்தி பெரமுனாவால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதமேந்திய எழுச்சி இலங்கை வரலாற்றில் ஒரு இரத்தக்களரி காலகட்டம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பரவலான கொலைகள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற ஊரடங்குச் சட்ட மீறல்கள் நடந்ததாகவும் கூறுகிறது.

எவ்வாறாயினும், தோல்வியடைந்த கலவரத்தின் பின்னர் கட்சி வன்முறையை கைவிட்டு தேர்தல் ஜனநாயகத்தின் பக்கம் திரும்பிய வேளையில் அநுர கட்சியின் அரசியல் குழுவிற்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அநுர கட்சித் தலைவராக பதவியேற்ற பின்னர், வரலாற்றில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச கூடகம் ஒன்றிடம் மன்னிப்பு கோரியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...