அநுரவை விரட்ட நாமல் கொண்டுள்ள அபார நம்பிக்கை

10

மக்களின் ஆணையை மீறிச் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மக்களின் ஆதரவுடன் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி மீண்டும் மலரும் என்பது உறுதி என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுர மீதும் அவர் தலைமையிலான அரசு மீதும் நாட்டு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மக்களின் ஆணையை மீறி அவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.

அரசின் முறையற்ற தீர்மானங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை பொலிஸார் மூலம் துன்புறுத்தி அடக்க ஜனாதிபதி முயல்கின்றார்.

கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை ஜனாதிபதி அநுரவும் அவர் தலைமையிலான அரசும் திட்டமிட்டுப் பழிவாங்கி வருகின்றனர்.

இந்த அநுர அணியை மக்களின் ஆதரவுடன் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம். மொட்டுக் கட்சியின் ஆட்சி மீண்டும் மலரும் என்பது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version