11 31
இலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அநுர அரசின் இனவாதம் அம்பலம்! கஜேந்திரகுமார் எம்.பி

Share

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அநுர அரசின் இனவாதம் அம்பலம்! கஜேந்திரகுமார் எம்.பி

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த வாரம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் கைதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் ஆதரவுடன் கையொப்பம் பெறும் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அது வெற்றி பெற்றுள்ளமையை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

விசேடமாக தமிழ் மக்களுக்காகப் போராடி ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்கான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மெளனிக்கப்பட்டபோது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பயங்கரவாத தடைச் சட்டம் அரசாங்கத்தினாலேயே ஒரு சட்டவிரோதமான, கொடூரமான, சட்டத்தின் ஆட்சியை மீறுகின்ற ஒரு ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கருத்து ஸ்ரீலங்கா அரசினால் சர்வதேச மட்டத்தில் விசேடமாக ஐ.நா. பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒரு சட்டத்தின் ஆட்சி முறைக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமான விடயமாகவும் கருதப்படுகின்றது. அது முற்றிலும் நீக்கப்பட்டு ஒரு புதிய சட்டம் சர்வதேச சட்டத்துக்கு அமைவாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும், அல்லது இருக்கும் சட்டத்தை முற்றுமுழுதாக மாற்றியமைத்து சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோஷம் மேலோங்கி நிற்கின்றது. இது கையொப்பம் பெறும் போராட்டம் ஊடாகவும், வேறு வழிகளிலும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று கூறுகின்றார்.அவர் அதனைச் சொல்வதற்கு அரசியல் பின்னணிதான் காரணம்.

ஏனெனில் இதற்கு முதல் அவருடைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்குக்கு வந்து சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று பேசியிருந்தார். ஆனால், தற்போது நீதி அமைச்சர் அந்த விடயத்திலிருந்து பின்வாங்குகின்றார். இதுவொரு அரசியல் காரணமாகத்தான் இருக்கவேண்டும்.

அந்தவகையில் தேசிய மக்கள் சக்தியின் ஜே.வி.பி. அமைப்பினரின் உறுப்பினர்களும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களும் அரசியல் கைதிகளாகவே இருந்தனர். இப்போதும் கூட அவர்கள் ஆட்சியில் இருந்திருக்காவிட்டால் வேறு ஒரு தரப்பு ஆட்சியில் இருந்திருந்தால், அவர்களது உறுப்பினர்கள் கைது செய்யப்படும்போது, அது அரசியல் நோக்கத்துக்கான கைதாகவே இருந்திருக்கும்.

ஆனால், அதே நிலையில், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான். இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

இந்த நீதி அமைச்சர் கடந்த காலங்களில் இருந்த பிற்போக்குவாத நீதி அமைச்சர்களின் நிலைப்பாட்டுடன் இணைந்து போவது ஒரு பலத்தை ஏமாற்றத்தைத் தரும் விடயமாகும். இது தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்கில் மாற்றம் என்று வந்த தேசிய மக்கள் சக்தியின் நாடகம் என்பதை நிரூபிக்கும் விடயமாகவே காணப்படுகின்றது என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...