1 11
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பை குறைத்து டயஸ்போராவை திருப்திபடுத்தும் அரசு: சாடும் எம்.பி.

Share

மகிந்தவின் பாதுகாப்பை குறைத்து டயஸ்போராவை திருப்திபடுத்தும் அரசு: சாடும் எம்.பி.

புலம்பெயர் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட (Chanaka Madugoda) குற்றஞ்சாட்டியுள்ளார்

பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைமையத்தில் நேற்று (7.2.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் எதிர்பார்ப்புக்கள் நாளுக்கு நாள் நிர்மூலமாகிக்கொண்டுள்ளன.

மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டதாக தெரியவில்லை.

மாறாக கடந்த நாடாளுமன்ற அமர்வுகள் பூராகவும் 76 வருட காலம் தொடர்பிலேயே பேசிக்கொண்டுள்ளனர்.

அது மாத்திரமல்லாது புலிகளையும் புலம்பெயர் அமைப்பக்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகின்றது.

அதற்காக யுத்தத்தை நிறைவூக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda rajapaksa) மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

தமிழ் பிரிவினைவாதத்தை விரும்பும் தரப்பினரை திருப்பதிப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்த விடயங்களை மேற்கொள்கின்றது.

அதற்காக அரசாங்கம் மகிந்தவின் பாதுகாப்பை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோன்று மக்களுக்கு அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு புறம்பாக செயற்பட்டுக் கொண்டுள்ளது என சானக மாதுகொட தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...