anura kumara dissanayake 3
இலங்கைசெய்திகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!

Share

இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்யின்(Manmohan Singh) மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க( Anura Kumara Dissanayake) இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, தனது டுவிட்டர் தளத்திலேயே இந்த இரங்கலை பதிவிட்டுள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “நான் எனது சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் இந்தியக் குடியரசுக்கும், கலாநிதி. மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்தாருக்கும், உலகெங்கிலும் அவர் மீதான பற்றை வெளிப்படுத்தும் எண்ணற்றவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன்.

தொலைநோக்கு கொண்ட தலைவரான கலாநிதி மன்மோகன் சிங்கின் வழிகாட்டல் இந்தியாவிற்குள் மாத்திரம் மட்டுப்படவில்லை.

2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக அவர் செயல்படுத்திய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமிய வேலைவாய்ப்பு செயல்திட்டம் போன்ற மாற்றத்துக்கான திட்டங்கள் என்பன சமத்துவம், தலையீடு தொடர்பிலான அவரது உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.

சர்வதேச ஒத்துழைப்புக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய காலாநிதி மன்மோகன் சிங், நீண்டகால கூட்டுறவு கூட்டணிகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன் BRICS போன்ற அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

இந்தியா, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் அவரது சிறந்த இராஜதந்திரம் தெரிகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...