9 26
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பிறிதொரு தரப்பினரை குடியேற்றும் தேவை இல்லை! அரசாங்கம் விளக்கம்

Share

தமிழ் மக்களின் காணிகளில் பிறிதொரு தரப்பினரை குடியேற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

மகிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த கோணத்தில் எங்களை பார்க்காதீர்கள், தேசிய நல்லிணக்கத்தை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம் என்றும ்கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மக்களின் காணிகளை சுவீகரிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றிப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று உறுப்பினர்கள் எம்முடன் இருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் நாங்கள் ஏன் வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் செயற்பட வேண்டும்,? இந்த வர்த்தமானி தொடர்பில் தமிழ் பிரதிநிதிகள் பல விடயங்களை முன்வைத்துள்ளார்கள்.

தமிழ் மக்களின் காணிகளில் பிறிதொரு தரப்பினரை குடியேற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

தேசிய நல்லிணக்கத்தை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு 09 மாகாணங்களையும் வரையறுத்து இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் பிரத்தியேகமாக பிரசுரிக்கப்படவில்லை. காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு காணி அமைச்சு மற்றும் சுற்றாடல் துறை அமைச்சு ஒன்றிணைந்து கூட்டு பத்திரத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
31 8
இலங்கைசெய்திகள்

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல்...

32 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும்...

30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...