இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

20 13

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் உட்பட 9 ஆண்கள், 20 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல், கல்கமுவ மற்றும் எஹெட்டுவெவ ஆகிய இடங்களிலிருந்து யாத்திரைக்காக கண்டிக்கு வந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இந்த விபத்தில் சிக்கியது.

பேருந்து வீதியை விட்டு விலகி ஒரு சரிவில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இல்லை எனவும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version