7
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் டொலர்களை வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

Share

இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் டொலர்களை வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கான 48 மாத நீடிக்கப்பட்ட EFF என்ற நிதி வசதி ஏற்பாட்டின் கீழ், தமது நிர்வாகக் குழு, மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக சுமார் 334 மில்லியன் டொலர்களுக்கான அனுமதி கிடைத்துள்ளது.

இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட, சர்வதேச நாணய மொத்த நிதி உதவி சுமார் 1.34 பில்லியன்களாக உயர்ந்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், இலங்கை அரசாங்கத்தின் செயல்திறன் வலுவாக இருப்பதாகவும், சமூக செலவினங்களுக்கான குறிக்கும் இலக்கைத் தவிர, டிசம்பர் 2024 இறுதிக்கான அனைத்து அளவு இலக்குகளும் எட்டப்பட்டதாகவும், சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஜனவரி 2025 இறுதிக்குள் வரவிருந்த பெரும்பாலான கட்டமைப்பு அளவுகோல்கள் தாமதமாக நிறைவேற்றப்பட்டன அல்லது செயல்படுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை தமது பத்திரப் பரிமாற்றத்தை சமீபத்தில் வெற்றிகரமாக முடித்தது இது, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

இந்தநிலையில், பொருளாதார மீட்பு வேகம் பெறுவதால் சீர்திருத்த முயற்சிகள் பலனளிக்கின்றன.

எனினும் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், சீர்திருத்த நிகழ்ச்சி நிரலைத் தக்கவைத்துக்கொள்வது பொருளாதாரத்தை நீடித்த மீட்சி மற்றும் கடன் நிலைத்தன்மையை நோக்கி நகர்த்துவதற்கு மிகவும் முக்கியமானது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...