9 48
இலங்கைசெய்திகள்

சுகாதாரத்துறையினர் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Share

சுகாதாரத்துறையினர் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உணவு மற்றும் பானங்களை கொள்வனவு செய்யும் போது மற்றும் உட்கொள்ளும் போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக ஆலோசகர் லஹிரு கொடித்துவக்கு, டெங்கு பரவுவதைத் தடுக்க நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறு பிரதேசவாசிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 45,448 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் மாத்திரம் 19,487 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் டெங்கு காய்ச்சலால் 22 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...