12 4
இலங்கைசெய்திகள்

வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Share

வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நாட்டில் உள்ள 58 இலட்சம் வாகனங்களில் 20 வீதமான வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் போக்குவரத்துத் துறையினால் சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு பல சேதங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை பிரதானமானது.

தீர்வாக, புகை பரிசோதனைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, நாட்டின் வளிமண்டலத்தின் தரத்தை நல்ல நிலையில் பராமரிக்க முடிந்துள்ளது.

மேலும், போக்குவரத்து அமைச்சு, கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு ஆகியவை இணைந்து அடுத்த 6 மாதங்களுக்குள் வளி மாசடைவதை அளவிடும் நிலையங்களின் எண்ணிக்கையை நூறாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்தத் தரவுகள் அனைத்தையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வருவதற்கும், உலகில் எங்கிருந்தும் எந்தவொரு குடிமகனுக்கும் புகை உமிழ்வு நிலைமைகளை ஓன்லைனில் நேரடியாகப் பார்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், வாகன புகை உமிழ்வு சான்றிதழ் பெற்ற பின்னர் அதே இடத்தில் இருந்து காப்புறுதி மற்றும் வாகன அனுமதிப் பத்திரம் பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், வீதி விபத்துகளைக் குறைக்கும் வகையில், பொலிஸாரினால் வழங்கப்படும் புள்ளிவழங்கும் முறைமைக்குத் தேவையான தரவுக் கட்டமைப்பு மற்றும் பொலிஸாருக்கு வழங்க வேண்டிய உபகரணங்கள் பெறுவதற்கான கேள்விமனு கோரும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளன.

அடுத்த மாதத்திற்குள் பொருத்தமான நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு அமைய புள்ளிகளை குறைக்க இருப்பதோடு அதனை நடைமுறைப்படுத்த முன்னர் செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு அறிவூட்டல் வாட்ஸ்அப் செய்திகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களின் பின்னர் இது தொடர்பான சட்டம் செயற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...