14 20
இலங்கைசெய்திகள்

உடனடியாக கைது செய்யபடுவீர்கள்! தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

உடனடியாக கைது செய்யபடுவீர்கள்! தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

தேர்தல் முடிவுகளை பெரிய திரைகளை பயன்படுத்தி, வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்க்கும் தரப்பினரை கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் போது அந்த முடிவுகளை தொலைக்காட்சிகள் அல்லது பெரிய திரைகளை பயன்படுத்தி வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்ப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாக்கு எண்ணிக்கையின் போது, ​​முடிவுகள் ஒளிபரப்பப்படும் போது குழுவாகத் திரண்டு, பட்டாசுகளை வெடித்தல், வீதிகளில் வினோதமாக இருத்தல், உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை வாக்குப்பதிவுக்கு பிறகு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது, ​​எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டும், வாக்கும் எண்ணும் நிலையங்களுக்கு அருகில் அல்லது வீதிகளில் இருக்க வேண்டாம்.இத்தகைய கூட்டங்கள் அனைத்தும் சட்டவிரோமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...