இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

Share
23 657bedcda2b5e
Share

நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2 வருடங்களில் 25 இலட்சத்து 65 ஆயிரத்து 365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 311,269 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காகவும், கடந்த ஆண்டில் 297,656 பேரும் வெளியேறியுள்ளனர்.

2023ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களில் சுமார் 70% சதவீதமானவர்கள் தொழில்ரீதியாக உயர் தகைமை பெற்ற பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் போன்றவர்கள் எனத் வசந்த அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களில் 34 வீதமானவர்கள் 25 – 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாடு சென்றவர்களில் 55 சதவீதம் பேர் ஆண்கள், 45 சதவீதம் பேர் பெண்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...