10 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மயக்க மருந்து விவகாரம்! தொடரும் மரணங்கள்

Share

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையொன்று திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேராதனை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்தை செலுத்தியதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக இதற்கு முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், குழந்தையின் மரணத்திற்கு மயக்க மருந்தே காரணம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் சுகாதார நிபுணர்கள் சங்கங்கள்,பெற்றோர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயலிழந்த மயக்கமருந்து தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சிக்கல்களினால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.

இக்குழந்தையின் மரணத்திற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும், ஆனால் மயக்க ஊசி செலுத்தியதன் விளைவால் ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் எனினும் மரணம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாண வைத்தியசாலைகளில் சுகாதார உதவியாளர்களான 253 பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு விருது வழங்கும் வைபவம் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (21) இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அறுஷா அஷ்விதா வெல்கம என்ற இரண்டரை வயது குழந்தை கடந்த 25ம் திகதி உயிரிழந்திருந்தது. திகன ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த குழந்தை, கடந்த 22 ஆம் திகதி காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும் 6 மணித்தியால சத்திரசிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ஆம் திகதி குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவ்வாறான வலிமிகுந்த சூழ்நிலைகளில் வைத்தியசாலை அதிகாரிகள் குழந்தைகளுக்கு மயக்க மருந்தை வழங்கமாட்டார்கள் என சம்பந்தப்பட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை தொடர்பான விடயங்களில் சில ஊடகங்கள் பொய்யாக செய்திகளை வெளியிடுவதாகவும், இது தொடர்பில் ஊடகங்கள் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...