இலங்கைசெய்திகள்

பிரிட்டன் தூதுவருடன் நாளை சுமந்திரன் பேச்சுவார்த்தை

Share
25 67b2f708e74d2
Share

பிரிட்டன் தூதுவருடன் நாளை சுமந்திரன் பேச்சுவார்த்தை

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்தவுள்ளார்.

குறித்த சந்திப்பானது நாளை (18) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளன.

அத்தோடு, நாட்டின் சமகால அரசியல் நிலவரம், அரசின் நடவடிக்கைகள், தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கின்றது.

இந்தநிலையில், அந்தத் தீர்மானத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட ஆணையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையின் தற்போதைய நிலவரம் மற்றும் அதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவு செய்வதற்கான சாத்தியப்பாடு என்பன பற்றி உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் சுமந்திரன் கேட்டறியவுள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான இணை அனுசரணை நாடுகளின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...