24 8
இலங்கைசெய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆனையிறவு உப்பு விவகாரம்

Share

ஆனையிறவு உப்பளமானது ஆளும் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு ஆனையிறவு உப்பு என்ற பெயரில் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட உப்பானது ரஜ உப்பு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

இந்த செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் மீண்டும் ஆனையிறவு உப்பு என பெயர்மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கணநாதன் இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட ஆளும் தரப்பினர் தெரிவித்தனர்.

இருப்பினும் குறித்த உப்பானது ரஜ உப்பு என்ற பெயரிலேயே விநியோகம் செய்யப்படுகின்ற விடயம் தெரிய வந்துள்ளது.

வலி வடக்கு வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக நியாயமான விலையில் உப்பு விநியோகம் இடம்பெறுவதாகவும், அது தனது வேண்டுகோள் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அந்த உப்பு பைகளை வலி வடக்கு வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் தமது உத்தியோகபூர்வ மூகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.அதில் ரஜ உப்பு என்றே காணப்படுகிறது.

இந்த விடயமானது ஆளும் தரப்பினர் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்ப்பையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்களும், ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெடர்ந்து பொய்யுரைத்து வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த உப்பின் பெயர் ஆனையிறவு உப்பு என இன்னமும் மாற்றம் செய்யப்படவில்லை என, ஆனையிறவு உப்பளத்தில் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...