25 10
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு குற்றக்குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக புலனாய்வு தகவல்: சபையில் அம்பலமான விடயம்

Share

அரசியல்வாதிகள் பலருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குற்றவாளிகளை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரவு ரோந்துகள் மற்றும் நடமாடும் ரோந்துகள் நடத்தப்படுகின்றன.

முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய பிராந்திய அரசியல் பிரமுகர்கள், 10 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, ஒழுங்கமைக்கப்படாத குற்றச் செயல்களைத் தடுக்கவும், அவற்றில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் விசேட நடவடிக்கைப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...