24 668aae2e0fddd 2
இலங்கைசெய்திகள்

ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காட்டுப் பூனை: தொடரும் விசாரணை

Share

ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காட்டுப் பூனை: தொடரும் விசாரணை

உரிய அனுமதியின்றி இலங்கைக்கு (Sri Lanka) கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆபிரிக்க (Africa) காட்டுப் பூனையொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சுங்க அதிகாரிகள் மேலும் கூறுகையில், இந்த விலங்குகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதாகவும் அதனால் சர்வதேச ரீதியில் இவற்றுக்கு அதிக விலை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கண்டி (Kandy) பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரினால் இந்த விலங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டுப் பூனை மக்கள் பார்வைக்காக தெஹிவளை (Dehiwala )மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இலங்கை சுங்கம் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் பல்லுயிர் பாதுகாப்பு, கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...