31 1
இலங்கைசெய்திகள்

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்து: பரிதாபமாக சிறுவன் உயிரிழப்பு

Share

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்து: பரிதாபமாக சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு (Batticaloa) – வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியினை கடக்க முயற்சித்த சிறுவன் மீது வான் மோதியதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை (Valaichchenai ), மீராவோடையைச் சேர்ந்த 8 வயதுடைய சப்பிறா மாஹீர் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் தனது தாய், தந்தையுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது பனிச்சங்கேணி பாலத்தில் முச்சக்கரவண்டியின் முன் விளக்கு எரியாது பழுதடைந்துள்ளது.

இதனையடுத்து வாகனத்தை பாலத்தில் நிறுத்திவிட்டு அதனை தந்தையார் சரி செய்துகொண்ட நிலையில் தாய் முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பாலத்தின் எதிர்பக்கமாக சென்று கையடக்க தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது தாயிடம் செல்ல சிறுவன் வீதியை குறுக்கே கடக்க முற்பட்டபோது வாகரையை நோக்கி பயணித்த டொல்பீன் ரக வான் சிறுவன் மீது மோதியதையடுத்து படுகாயமடைந்த சிறுவனை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வான் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...