11 23
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு போலி விண்ணங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை

Share

இலங்கையர்களுக்கு போலி விண்ணங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினர், இலங்கையிலிருந்து வரும் வாடிக்கையாளர்களின் சார்பாக தஞ்சம் கோரி போலியான விண்ணப்பங்களை சமர்ப்பித்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

61வயதான சுவைருல் அமீர் (Zuwairul Ameer) மற்றும் மற்றும் 63வயதான கிளாடெட் பீரிஸ் (Claudette Pieries) ஆகியோரே தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறைந்தது 2007 ஆம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கையை தம்பதியினர் மேற்கொண்டு வந்துள்ளதோடு, நீதிமன்ற ஆவணங்களின்படி, தம்பதியினர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் குறைந்தது 1,000 டொலர்களை வசூலித்துள்ளனர்.

சுவைருலுக்கு எதிரான குற்றவியல் முறைப்பாடு ஒன்றில், அவர் 2020 மே மாதம் இலங்கையில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவரைச் சந்தித்தார் அவர், சுவைருலிடம் இலங்கையில் தவறாக நடத்தப்பட்ட உண்மைக் கதையை கூறினார்.

எனினும் அமீர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது, குறித்த இலங்கையர், அவரது நாட்டில் பொலிஸாரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற பொய்யான தகவலை உள்ளிட்டுள்ளார்.

இதுபோன்ற விபரங்கள் இல்லாவிட்டால் புகலிடம் வழங்கப்பட மாட்டாது என்று சுவைருல், குறித்த இலங்கையரிடம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 2025 பெப்ரவரி 25 ஆம் திகதியன்று குறித்த தம்பதியினருக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ளது

இதன்போது அவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் 250,000 டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...