குழுநிலையில் திருத்தங்களுடன் கூடிய தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இன்று (அக்டோபர் 17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தும் சட்டமூலம், 2025 ஜூன் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் நிறைவேற்றப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வேண்டுகோளின் பேரில், சட்டவரைஞர் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து, குழுநிலையில் முன்மொழியப்பட வேண்டிய பல சிறிய திருத்தங்களை அடையாளம் கண்டுள்ளது.
அதன்படி, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திருத்தங்கள், ஒக்டோபர் 21 ஆம் திகதி எந்த விவாதமும் இன்றி குழுநிலையின்போது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், சட்டமூலம் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு அதே நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.