tamilni 95 scaled
இலங்கைசெய்திகள்

அம்பிட்டிய தேரருக்கு சபையில் பதிலடி கொடுத்த சாணக்கியன்

Share

அம்பிட்டிய தேரருக்கு சபையில் பதிலடி கொடுத்த சாணக்கியன்

மட்டக்களப்பு – மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தமிழ் மக்கள் துண்டு துண்டாக வெட்டுவேன் என தெரிவித்துள்ளதுடன், என்னையும் எனது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். இந்த பௌத்த பிக்குவுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் இருக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்டளையை பொலிசார் நடைமுறைப் படுத்தவில்லை என்பதனை வலியுறுத்தியிருந்தேன்.

அந்த விடயத்தை இந்த தேரர் வேறு வகையில் திரிபுப்படுத்தி நான் நாடாளுமன்றத்தில் பேசும் போது என்னை தடுக்க அங்கு முதுகெலும்புள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் இல்லையா என்று எனது சிறப்புரிமையை மீறும் ஓர் காணொளியினை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் கிழக்கில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வெருவரையும் துண்டு துண்டாக வெட்டுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.

இவ்வாறாக என்னையும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் இந்த பௌத்த பிக்குவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...