24 660cd1fb430e1
இலங்கைசெய்திகள்

அரசியல் கட்சிகள் மாயையில் : ரணில் தரப்பு ஆதங்கம்!

Share

அரசியல் கட்சிகள் மாயையில் : ரணில் தரப்பு ஆதங்கம்!

இலங்கையில் 60 வீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“சில அரசியல் கட்சிகள் அதிக வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் வதந்திகள் பொய்யானவை, அந்த அரசியல் கட்சிகள் மாயையில் வாழ்கின்றன.

அதேவேளை, 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது நாட்டில் ஏற்பட்ட ஆச்சரியத்தை போன்றதொரு ஆச்சரியத்தை தற்போதைய சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்துவார்.

திரைக்கு பின்னால் பல விடயங்கள் நடக்கின்றன, எனவே வெளியில் இருந்து பார்த்து முடிவுகளுக்கு வர வேண்டாம்.

பல தனிநபர்களும் கட்சிகளும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளனர், மேலும் தேர்தல் நெருங்கும்போது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.” என்றார்.

மேலும், இந்த ஆண்டுக்கான (2024) மே தின ஊர்வலத்தை டவர் மண்டபத்திற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...