இனிவரும் அடுத்த தேர்தலில் நாம் சுதந்திரக்கட்சியின் தலைமையிலான கூட்டணியிலேயே களமிறங்குவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் தேர்தலில் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்துள்ளது.
ராஜபக்ச அரசு தொடர்ந்தும் 5000 ரூபாவை அச்சிட்டு விநியோகித்தாலும் சனத்தொகையில் 7% ஆனவர்களே அரச துறை சார் ஊழியர்களாக உள்ளனர்.
650,000 பேர் இரவு உணவை உட்கொள்வதில்லை என சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதை நோக்குகையில், ரூ.5,000 கொடுப்பனவால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை, அதிகரித்து வரும் பொருட்களின் விலையால் மக்கள் எப்படி வாழ முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
#LocalNews
Leave a comment